அம்மா, அப்பாவை கட்டியணைத்த விஜய்! தன் மகன் தன்னை கட்டியணைக்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசையை விஜய் நிறைவேற்றியுள்ளார்.
மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், தற்போது சன் டிவியில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதில், படக்குழுவினருடன் இணைந்து விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா விஜய் ஆகியோர் உள்பட ஏராளமான ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அவர்களுடன் இணைந்து அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், எனக்கு எதுவும் பேச தோன்றவில்லை. கடவுளுக்குதான் நன்றி சொல்கிறேன்.
நாளைய தீர்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று அவர் கூறினார். அதற்கு மிர்ச்சி விஜய் நாங்களும் அதற்காகதான் காத்துக்கொண்டிருக்கிறோம் என்றார்.
இதையடுத்து பேசிய ஷோபா சந்திரசேகர் தனது மகன் தன்னை கட்டியணைக்க வேண்டும் என்றார்.
உடனே மேடைக்குச் சென்ற விஜய், தனது அம்மாவையும், அப்பாவையும் கட்டிப்பிடித்து அவர்களுக்கு முத்தம் கொடுத்து அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.