Home சினிமா கோலிவுட் கத்தியை காட்டி மிரட்டி நடிகையின் தந்தையிடம் கொள்ளை!

கத்தியை காட்டி மிரட்டி நடிகையின் தந்தையிடம் கொள்ளை!

335
0
Meera Chopra

Meera Chopra; கத்தியை காட்டி மிரட்டி நடிகையின் தந்தையிடம் கொள்ளை! நடிகை மீரா சோப்ராவின் தந்தையிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றுள்ளனர்.

நடிகை மீரா சோப்ராவின் தந்தையிடம் இருந்து மர்ம நபர்கள் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

தமிழில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வந்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. அதன் பிறகு ஜாம்பவான், லீ, மருதமலை, காளை, ஜகன்மோகினி, இசை, கில்லாடி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட்டில் நாஸ்டிக் மற்றும் மொஹாலி புவ்வு என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இவர் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மீரா சோப்ராவின் தந்தையிடம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் கூறுகையில், போலீஸ் காலனி பகுதியில் எனது தந்தை நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது, அங்கு ஸ்கூட்டரில் வந்த இருவர், எனது தந்தையிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இதுதான் டெல்லியின் பாதுகாப்பு நிலை என்று பதிவிட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டேக் செய்திருந்தார்.

இதையடுத்து, மற்றொரு டுவிட்டரில், டெல்லி காவல் துறையினருக்கு நன்றி. எது திருடுபோனது என்பது முக்கியமல்ல, நமது வீட்டுப் பெரியவர்களை பாதுகாப்பது தான் முக்கியம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
Next articlePLAN B என்றால் என்ன? விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here