Home சினிமா கோலிவுட் தல அஜித்துடன் இணைந்து நடித்த மீரா மிதுன்: வைரலாகும் புகைப்படம்!

தல அஜித்துடன் இணைந்து நடித்த மீரா மிதுன்: வைரலாகும் புகைப்படம்!

385
0
Thala Ajith and Meera Mithun

தல அஜித்துடன் இணைந்து நடித்த மீரா மிதுன்: வைரலாகும் புகைப்படம்! அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தில் நடிகை மீரா மிதுன் அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்று ஒரு புகைப்படம் வெளியாகி வருகிறது.

அஜித் நடிப்பில் வந்த என்னை அறிந்தால் படத்தில் நடிகை மீரா மிதுனும் நடித்துள்ளார். ஆனால், அவரது காட்சி பெரிய திரையில் இடம்பெறவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். மாடலும், நடிகையுமான மீரா மிதுன், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எப்போதும் தனது கிளாமரான ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியவர்.

அண்மையில் கூட படுக்கையறையில், ஆண் நண்பருடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அஜித் மற்றும் மீரா மிதுன் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து நடிகை மீரா மிதுன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் என்னை அறிந்தால்.

இந்தப் படத்தில் அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா, பார்வதி நாயர், பேபி அனிகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து மீரா மிதுனும் நடித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு, என்னை அறிந்தால் படத்தில் இடம் பெறும் காட்சி இது. தல அஜித்திற்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.

என்னுடைய முதல் படமே தல அஜித்துடன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

ஆனால், எதிர்பாராத விதமாக இந்தக் காட்சி பெரிய திரையில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleபோலி ஃபேஸ்புக் பக்கம்: ரசிகர்களை எச்சரித்த நடிகை பாவனா!
Next articleஅழகே பொறாமைப்படும் பேரழகி: ஜனனி ஐயர் போட்டோஷூட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here