Home சினிமா கோலிவுட் தமிழக அரசியலை சாடிய மீரா மிதுனின் அடுத்த டார்க்கெட் திமுக?

தமிழக அரசியலை சாடிய மீரா மிதுனின் அடுத்த டார்க்கெட் திமுக?

267
0
Meera Mithun DMK

Meera Mithun Twitter; தமிழக அரசியலை சாடிய மீரா மிதுனின் அடுத்த டார்க்கெட் திமுக? சர்ச்சை நடிகை டுவிட்டரில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.

மீரா மிதுன், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன், தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். எனினும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், பல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், தன்னைப் போன்று ஹேர்ஸ்டைல், தோற்றம் என்று மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று த்ரிஷாவை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இவ்வளவு ஏன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் தான் என்று கூறி வருகிறார். அதோடு, தமிழக அரசை களைத்துவிட்டு, தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்து வருகிறார். அதோடு, நடிகர், நடிகைகளை வம்பிழுத்து வருகிறார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, அதில் உதயநிதியை டேக் செய்து ‘ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என்று மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.

இதே போன்று, இதற்கு முன்னதாக, திமுக தலைவர் முக ஸ்டாலினை டேக் செய்து நாம் இணைந்து வெல்வோம் என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழக அரசியல் பற்றி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த மீரா மிதுன் தற்போது திமுக பக்கம் தனது கவனத்தை திருப்புவது மேலும், பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

Previous articleஅஜித்தை விருமாண்டியாக்கிய ரசிகர்கள்: வைரலாகும் விருமாண்டி 2 போஸ்டர்!
Next articleFIR படத்தின் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ன? வெளியான வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here