Chiranjeevi Sarja; மேக்னா ராஜ் கர்ப்பம்: குழந்தையை பார்க்காமலேயே சென்ற சிரஞ்சீவி சார்ஜா! தனது மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தும், இதுவரை அது பற்றி அறிவிக்காமலேயே சிரஞ்சீவி சார்ஜா பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கும் நிலையில், நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பிறந்தவர் தான் சிரஞ்சீவி சார்ஜா. இவர், ஆக்ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். 4 ஆண்டுகளாக அர்ஜூனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
சிரஞ்சீவி சார்ஜாவும், நடிகை மேக்னா ராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேக்னா ராஜ் தமிழில், காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
சிரஞ்சீவி சார்ஜா வாயுபுத்ரா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதுவரை 19 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ராஜமார்தாண்டா படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது.
மேலும், ஏப்ரல் உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பும் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஜெயநகர் பகுதியிலுள்ள சாகர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தனது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருப்பது பற்றி அறிந்தும், கூட இதுவரை அது பற்றி அறிவிக்கவில்லை. முதலில் கர்ப்பம் பற்றி அறிவிக்கத்தான் இருவரும் விரும்பியுள்ளனர்.
ஆனால், கர்ப்பத்தின் ஆரம்ப காலம் என்பதால், சற்று காலம் பொறுத்திருந்து பின்னர் அறிவிக்கலாம் என்று இருவரும் முடிவு செய்துள்ளனராம்.
இந்த நிலையில், தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், குழந்தையை பார்க்காமலேயே சென்ற சிரஞ்சீவி சார்ஜாவின் உடலுக்கு கன்னட திரையுலகினர், கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேக்னா ராஜ் கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.