Home சினிமா கோலிவுட் கேப்டன் பிரபாகரன் படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மரணம்!

கேப்டன் பிரபாகரன் படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மரணம்!

238
0
Jeyachandran Passed Away

Editor Jeyachandran Passed Away; கேப்டன் பிரபாகரன் படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மரணம்! விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் என்று 150 படங்களுக்கு மேல் படத்திகுப்பாளராக பணியாற்றிய ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

சினிமா படத்தொகுப்பாளர் ஜெயச்சந்திரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

விஜயகாந்த் நடிப்பில் வந்த ஊமை விழிகள் படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜெயச்சந்திரன். இவரை தயாரிப்பாளர் ஆபாவாணன் அறிமுகம் செய்து வைத்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து, உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், உரிமை கீதம், புதுப்பாடகன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட 150 படங்களுக்கும் மேல் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், ஜெயச்சந்திரன் தனது மேடவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து, அவரது உடல் மடிப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயச்சந்திரனின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஜெயச்சந்திரனுக்கு தேவி என்ற மனைவியும், அருள் முருகன், பாலமுருகன் என்ற 2 மகள்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleசாத்தான்குளம் கொடூரம்: சட்டத்திற்கு மேலாக யாரும் இல்லை: ஜெயம் ரவி காட்டம்!
Next articleSathankulam: போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும்: கொந்தளித்த சினிமா பிரபலங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here