Home சினிமா கோலிவுட் எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது: யுவன் சங்கர் ராஜா!

எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது: யுவன் சங்கர் ராஜா!

309
0
Yuvan Shankar Raja

Yuvan Shankar Raja Suicide Plan; எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது: யுவன் சங்கர் ராஜா! முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர், மாஸ் நடிகர்களின் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தற்போது தல அஜித்தின் வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதியின் மாமனிதன், ஜெயம் ரவியின் பூமி, ஜன கண மண, சிம்புவின் மாநாடு என்று பல படங்கள் அவரது கைவசம் இருக்கிறது.

அண்மையில், ரசிகர்களுடன் சமூக வலைதளங்களில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய பயம் என்ன?

நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். தொடர்ந்து, யுவன் என்ற தனது பெயரையும் அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார்.

2015 ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா விஜய் நடிக்கும் தளபதி65 படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னதாக விஜய் நடித்த புதிய கீதை படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் கடந்த, 2003 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது மீண்டும் விஜய் உடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

Previous articleயூடியூப்பில் 4 மில்லியன் வியூஸ் வரையில் பெற்ற கோப்ரா தும்பி துள்ளல் பாடல்!
Next articleகொரோனாவுக்கு பலியான தெலுங்கு தயாரிப்பாளர் பொக்கூரி ராமா ராவ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here