Home சினிமா கோலிவுட் இப்போவே 5 மாசம் ஆச்சு: கர்ப்பமாக இருக்கிறேன்: மைனா நந்தினி!

இப்போவே 5 மாசம் ஆச்சு: கர்ப்பமாக இருக்கிறேன்: மைனா நந்தினி!

433
0
Myna Nandhini Pregnant

Myna Nandhini Pregnant; இப்போவே 5 மாசம் ஆச்சு: கர்ப்பமாக இருக்கிறேன்: மைனா நந்தினி! மைனா நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இப்போவே 5 மாதம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மைனா நந்தினி தான் கர்ப்பமாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது என்னவோ சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி, வெண்ணிலா கபடிக் குழு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில், ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், குடும்ப பிரச்சனை காரணமாக, கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து ஆழ்ந்த துயரத்தில் இருந்த மைனா, தனது முழுகவனத்தையும் நடிப்பு மீது செலுத்தினார்.

இந்த நிலையில், நாயகி என்ற சீரியலில் நடித்த யோகேஸ்வரனை காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில், சின்னத்திரை பிரபலங்கள், பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மைனா நந்தினி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதற்காக புதிய உடைகளையும் அவரது கணவர் யோகேஸ்வரன் வாங்கிக் கொடுத்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதையடுத்து, லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், 3 மாதம் வரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது 5 மாதம் ஆகிவிட்டதாகவும், வயிறு பெரிதாக பெரிதாக லூசான ஆடைகளை தான் அணிய வேண்டியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மேலும், எங்களுக்கு ஆண் குழந்தை, பெண் குழந்தை வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. மொத்தத்தில் எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று மைனா நந்தினி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஹீரோயின்கள் இல்லை என்றாலும் படம் இல்லை: தமன்னா சம்பள விவகாரம்!
Next articleமுதல் முறையாக இரட்டை வேடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here