Home சினிமா கோலிவுட் JFW Awards 2020: நேர்கொண்ட பார்வை ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விருது!

JFW Awards 2020: நேர்கொண்ட பார்வை ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு விருது!

340
0
JFW Awards 2020

JFW Awards 2020; ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு (Shraddha Srinath) சிறந்த நடிகை விமர்சகருக்கான JFW Awards 2020 விருது வழங்கப்பட்டுள்ளது.

Nerkonda Paarvai; நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு சிறந்த நடிகை விமர்சகருக்கான JFW Awards 2020 வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் நேர்கொண்ட பார்வை.

முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி உருவான இப்படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே அமோக வரவேற்புப் பெற்றார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத், பிக் பாஸ் அபிராமி, ஆண்ட்ரியா தைராங், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் உள்பட பலர் நடித்திருந்தனர்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வலிமை படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு சிறந்த நடிகை விமர்சகருக்கான (Best Actress Critics) JFW Awards 2020 வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை விமர்சகருக்கான விருது பெற்ற ஸ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதே போன்று விஸ்வாசம் (Viswasam) படத்தில் அஜித் – நயன்தாராவின் மகளாக நடித்த நடிகை அனிகாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான JFW Awards 2020 வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகுறித்த நேரத்தில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும்
Next articleகடத்தலா? அது எப்போ நடந்தது – ட்விஸ்ட் கொடுத்த இளமதி | Tamil News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here