Home சினிமா கோலிவுட் நிழல்கள் ரவி பிறந்தநாள் இன்று!

நிழல்கள் ரவி பிறந்தநாள் இன்று!

383
0
Nizhalgal Ravi Birthday

Nizhalgal Ravi Birthday; நிழல்கள் படத்தின் மூலம் சினிமாவில் நிழல்கள் ரவி என்று அடையாளம் பெற்ற ரவி இன்று தனது 64 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நிழல்கள் ரவி பிறந்தநாள் இன்று.

கடந்த 1980 ஆம் ஆண்டு வந்த நிழல்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நிழல்கள் ரவி.

இந்தப் படத்தின் கோபி என்ற ரோலில் நடித்தவர் ரவி. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் அவருக்கு நிழல்கள் ரவி என்று அடையாளக் கொடுத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

வேதம் புதிது, நாயகன், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணாமலை, ஆசை என்று ஏராளமான படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

படங்களில் நடிப்பதோடு அல்லாமல், சின்னத்திரையிலும் வலம் வந்துள்ளார். ரயில் சினேகம், அலைகள், காசளவு நெசம், தென்றல் ஆகிய தொடர்களில் நடித்து முடித்துள்ளார்.

ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர் என்று எந்த ரோலாக இருந்தாலும் சரி, கச்சிதமாக நடித்து முடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சினிமாவில் கால் பதித்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 64 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது பிறந்தநாளை தெரிவித்து வருகின்றனர்.

நிழல்கள் ரவிக்கு விஷ்ணுப்ரியா என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும், 5 சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here