Trisha Corona Advice நடிகை த்ரிஷா கொரோனா வைரஸ் தீவிரம் குறித்தும், ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டில் இருப்பதின் அவசியம் குறித்தும் இரண்டாவது முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா மீண்டும் கொரோனா வைரஸ் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.
கொரோனாவால் சினிமா பிரபலங்கள் முதல் அப்பாவி ஜனங்கள் வரை அனைவருமே வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை வந்துவிட்டது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எங்கிருந்து வந்ததோ, அங்கு சகஜ நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அப்பாவி ஜனங்கள் ஒருபக்கம், சகட்டுமேனிக்கு வீடியோ வெளியிட்டு வரும் பிரபலங்கள் ஒரு பக்கம்.
வேலையில்லாமல் இருப்பவர்கள் எத்தனையோ பேர். இப்படியே காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா மீண்டும் கொரோனா வைரஸ் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்த கொரோனா வைரஸ் அல்லது கோவிட்19 வைரஸ் சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வகை வைரஸ்.
வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு சமீபத்தில் வந்தவர்கள் தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
இது உங்களை அவமதிப்பு செய்வதற்கோ அல்லது சித்திரவதை செய்வதற்கோ இல்லை. இது உங்களது பாதுகாப்பிற்காக மட்டும்தான்.
உங்களது குடும்பம், குடும்பத்தில் உள்ள சிறியவர்கள், வயதானவர்கள் ஆகியோரது பாதுகாப்பிற்காக மட்டும்தான்.
அரசின் விதிகளை யாரும் மீறாதீர்கள். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். அனைவருமே வீட்டில் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த வைரஸுக்கு எதிராக போராட முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
இது அரசு விளம்பரம் மாதிரி தெரிகிறது. ஆம், த்ரிஷா வெளியிட்டுள்ள வீடியோவை அரசு தங்களது விளம்பரத்திற்காக பயன்படுத்திக் கொண்டதாக இறுதியில் தமிழகத்தின் முத்திரையோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவம் தெரிகிறது.