Padmaja Actress; இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!
Padmaja பத்மஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பத்மஜாவிற்கு ஒரு மகன் இருக்கிறான்.
சென்னை திருவொற்றியூரில் இளம் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரில் உள்ள காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் துணை நடிகை பத்மஜா. இவர், சினிமாவிலும், விளம்பரங்களிலும் துணை நடிகையாக நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று வீட்டின் கதவு நீண்டநேரமாக பூட்டியே இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பத்மஜா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பத்மஜாவின் செல்போன் மூலமாக தங்களது முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். இதில், பத்மஜா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, பெங்களூருவில் உள்ள தனது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அழுதுகொண்டே தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். பத்மஜாவின் சொந்த ஊர் ஆந்திராவின் நெல்லூர். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சென்னை வந்து திருவொற்றியூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.
பத்மஜா (Padmaja Actress) கல்யாண வாழ்க்கை
பத்மஜாவும், பவன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், பத்மஜாவிற்கும், பவனுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பவன் வீட்டை விட்டு ஆந்திரா சென்றுள்ளார் என்றும், குழந்தையை பத்மஜாவின் உறவினர்கள் தூக்கி சென்றுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
இதனால், தனிமையில் வாழ்ந்து வந்த பத்மஜா ஒரு கட்டத்தில் உறவுக்கார வாலிபரை வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இதனால், வீட்டு உரிமையாளர் பத்மஜாவை கண்டித்து வீட்டை உடனடியாக காலி செய்யுமாறு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.
மனமுடைந்த பத்மஜா வீட்டை விட்டு இல்லாமல், உலகத்தை விட்டு சென்றுவிடலாம் என்று முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில், பத்மஜாவுடன் தங்கியிருந்த வாலிபரை காணவில்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். பத்மஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்ட பிறகு பத்மஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், துணை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.