Aadvik Ajith Birthday: தல ரசிகர்கள் வாழ்த்து! குட்டி தல ஆத்விக்
ஆத்விக் இன்று தனது 6 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அஜித் – ஷாலினி தம்பதியினரின் அன்புமகன் ஆத்விக் இன்று தனது 6ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தல ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தல அஜித்துக்கு ரசிகர்கள் இல்லாத நாடே எங்கும் இல்லை. அந்தளவிற்கு ரசிகர்களை கொண்டுள்ளார். இவர், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த, 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அஜித் – ஷாலினி திருமணம் நடந்தது. இதையடுத்து, கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அனோஷ்கா பிறந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஆத்விக் பிறந்துள்ளார்.
இவர் பிறந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில், 5 வயதை கடந்து இன்று தனது 6 ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
குட்டி தல ஆத்விக்
அஜித்துக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று அவரது செல்லப்பிள்ளை ஆத்விக்கிற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆத்விக்கின் 6ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு ஆத்விக் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாளில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அஜித் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது போன்றும், ஷாலினி மட்டும் ஆத்விக் அருகில் நின்று கொண்டிருப்பது போன்று, ஆத்விக் தனது அக்கா அனோஷ்காவை அழைப்பது போன்றும் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு, தல ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அசத்தியுள்ளனர். அதோடு, இயற்கையை வளப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டும் வருகின்றனர்.
மேலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மனித நேயத்துடன் வயதான முதியோர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்துள்ளனர்.
தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ரசிகர்கள் டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதோடு, தல எப்படி தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத உச்சத்தில் தன் கொடியைப் நாட்டினாரோ அதுபோல ஆத்விக் விளையாட்டில் உலக அளவில் தன் புகழை நிலை நாட்ட போகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில், படப்பிடிப்பின் போது பைக் ஓட்டும் காட்சியின் போது தவறி விழுந்த அஜித்திற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். வலிமை படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.