Home சினிமா கோலிவுட் ஹலோவில் டிரெண்டாகும் கமலின் PanchathanthiramScenes!

ஹலோவில் டிரெண்டாகும் கமலின் PanchathanthiramScenes!

341
0
Kamal Haasan Panchathanthiram

Panchathanthiram; ஹலோவில் டிரெண்டாகும் கமலின் PanchathanthiramScenes! கமல் ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், PanchathanthiramScenes என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

PanchathanthiramScenes என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி திரைக்கு வந்த காமெடி படம் பஞ்சதந்திரம்.

முதலில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னர், சிறிய பட்ஜெட் படம் என்பதால், ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பதிலாக தேவா மாற்றப்பட்டார்.

ஐந்து நண்பர்களுக்கு இடையில் நடக்கும் கதையை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனக்கே உரிய ஸ்டைலில் காமெடியாக கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தில் உள்ள அனைத்து பாடல்களுக்கும் கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கனடாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 17 நாட்கள் கனடாவில் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு லாஸ் ஏஞ்செல்ஸ் செல்வதற்காக டொரோண்டா விமான நிலையத்திற்கு கமல் ஹாசன் வந்த போது, பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கமல் ஹாசனிடம் தவறாக பேசியுள்ளார்.

இதையடுத்து, இருவருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று, தணிக்கைக்கு சென்ற போது இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு பாடல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தணிக்கைக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இடம்பெற்றிருந்த பாடல் நீக்கப்பட்டது.

இப்படி பல சர்ச்சைகளுக்கு பிறகு வெளிவந்த படம் பஞ்சதந்திரம். இந்த படம் வெளியாகி நேற்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதன் காரணமாக ஹலோவில் 18YearsOfPanchatanthiram என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. இதைத் தொடர்ந்து, PanchathanthiramScenes என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

Previous articleபிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் பர்த்டே டுடே!
Next articleசிம்புவின் கெட்டவன் முடியவேயில்லை: லேகா வாஷிங்டன் வருத்தம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here