Home சினிமா கோலிவுட் மாஸ்டர் உண்மையின் பிரதிபலிப்பு: யார் அந்த நபர்? சர்ப்ரைஸ் தகவல்!

மாஸ்டர் உண்மையின் பிரதிபலிப்பு: யார் அந்த நபர்? சர்ப்ரைஸ் தகவல்!

330
0
Master True Story

Master True Story; மாஸ்டர் உண்மையின் பிரதிபலிப்பு: யார் அந்த நபர்? சர்ப்ரைஸ் தகவல்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் உண்மையில் இருக்கும் ஒரு நபரை பற்றியது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படம் உண்மையின் பிரதிபலிப்பு என்றும், ஒரு நபரை பற்றிய கதை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், நாசர் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வரவேண்டியது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் போஸ்ட் புரோடக்‌ஷன், டப்பிங் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாஸ்டர் கதையை எழுதும் பணியில், லோகேஷ் கனகராஜூக்கு பொன் பார்த்திபன் உதவியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மாஸ்டர் கதை உண்மையில் இருக்கும் ஒரு நபரை பார்த்து தான் இயக்குநருக்கு தோன்றியது என தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் கதை உண்மையின் பிரதிபலிப்பு என்ற தகவல் தற்போது வெளியாகி வருவதால், ரசிகர்களுக்கு அது சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ஆனால், யார் அந்த நபர் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

லாக்டவுன் முடிந்ததும், மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று தெரிகிறது. மாஸ்டர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleஅழகின் மறு உருவம் அம்ரிதா ஐயர் பர்த்டே டுடே!
Next article20 வருடங்களில் மொத்தம் 5 தொற்று நோய்கள் பரப்பிய சீனா: அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here