Home சினிமா கோலிவுட் Ponmagal Vandhal First Look: வழக்கறிஞராக மிரட்டும் ஜோதிகா

Ponmagal Vandhal First Look: வழக்கறிஞராக மிரட்டும் ஜோதிகா

365
1
Ponmagal Vandhal First Look ஜோதிகா பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக்

Ponmagal Vandhal First Look: பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக்

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது.

தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில், இவருடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.

த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Ponmagal Vandhal First Look

இன்று மாலை 5 மணிக்கு பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ன் வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரில் ஜோதிகா வழக்கறிஞராக இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. அவரது பின்புறம் ஏகப்பட்ட பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள் இடம்பெற்றிருந்தது.

இதை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் முற்றிலும் பெண்களை மையப்படுத்திய படமாகவும், குறிப்பாக சமூகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று தெரிகிறது.

இதற்கு முன்னதாக நடிகை அம்பிகா, லட்சுமி, அனுஷ்கா, நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், அஜித், விஜய், கமல் ஹாசன் ஆகியோர் பலர் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஜோதிகாவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் ஜோதிகா – சூர்யா இருவரது கூட்டணியில் படங்கள் வெளியாகி வருகிறது.

ஆனால், என்ன ஜோடியாக இல்லை. ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும், ஜாக்பாட் ஆகிய படங்களை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. பொன்மகள் வந்தாள் படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம்தான் தயாரிக்கிறது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா39 என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அருவா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் முதல் முறையாக இமான் இணைந்துள்ளார். படத்திற்கு இமான்தான் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் ஒரேகட்டமாக படப்பிடிப்பு முடித்து வரும் தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleMaster மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு: செல்ஃபி எடுத்துக்கொண்ட படக்குழு!
Next articleJyothika: அஜித்தை பின்பற்றும் ஜோதிகா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here