Ponniyin Selvan; கொரோனாவால் பொன்னியின் செல்வன் பட்ஜெட் குறைப்பு! மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியில் செல்வன் படத்தின் பட்ஜெட் கொரோனா பொருளாதார நிலைமை காரணமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
முதற்கட்ட படபிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலும் படபிடிப்பு நடைபெற்றது.
லைகா நிறுவனம் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்திற்கு கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரை பட்ஜெட் திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, பட்ஜெட்டை குறைக்க லைகா நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் இரு பாகங்களாக உருவாக இருப்பதாக இயக்குநர் மணிரத்னம் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.