Poonam Pandey Arrest; ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றிய பூனம் பாண்டே கைது! மும்பையில் ஊரடங்கை மதிக்காமல், தனது ஆண் நண்பருடன் ஊர் சுற்றிய பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொரோனா லாக்டவுனையும் மீறி வெளியில் காரில் சுற்றித்திரிந்த பாலிவுட் நடிகை பூனம் பாண்டே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. வரும் 17 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை ஏற்கனவே மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சர்ச்சைக்கு பேர் போன நடிகை பூனம் பாண்டேவை போலீசார் கைது செய்துள்ளனர். இவர், இந்தியா கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை கைப்பற்றினால், நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், அவரைத் தான் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று, தனது ஆண் நண்பர் ஷாம் அகமது என்பவருடன் மும்பை மெரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றித் திரிந்துள்ளார்.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மும்பை போலீசார் எந்தவித காரணமும் இல்லாமல் காரில் சுற்றித்திரிந்த பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர். அதன் பிறகு எச்சரித்து அவர்களை விடுவித்துள்ளனர்.
ஆனால், காரை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பர் மீது சட்டத்தை மதிக்காது, ஊரடங்கினை மீறி நோய் பரப்பும் நோக்கத்துடன் வெளியில் சுற்றித்திரிந்தது, பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் கைது செய்யப்பட்டது குறித்து பூனம் பாண்டே வீடியோ வடிவில் விளக்கம் கொடுத்துள்ளார்.