Home சினிமா கோலிவுட் குயில புடிச்சி கூண்டிலடச்சி பாடச்சொல்லுகிற உலகம்: சின்னத்தம்பி வந்து 29 வருசம் ஆச்சு!

குயில புடிச்சி கூண்டிலடச்சி பாடச்சொல்லுகிற உலகம்: சின்னத்தம்பி வந்து 29 வருசம் ஆச்சு!

506
0
29YrsOfChinnaThambi

Prabhu Chinna Thambi Movie; குயில புடிச்சி கூண்டிலடச்சி பாடச்சொல்லுகிற உலகம்: சின்னத்தம்பி வந்து 29 வருசம் ஆச்சு! பிரபு, குஷ்பு நடிப்பில் வந்த சின்னதம்பி படம் வெளியாகி 29 வருடங்கள் கடந்துள்ளது.

சின்னத்தம்பி படம் திரைக்கு வந்து 29 ஆண்டுகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பி வாசு – பிரபு கூட்டணியில் வந்த 3 ஆவது படம் சின்னத்தம்பி. இதற்கு முன்னதாக இவர்கள் கூட்டணியில் என் தங்கச்சி படிச்சவ, பிள்ளைக்காக ஆகிய படங்கள் திரைக்கு வந்து வெற்றி கண்டுள்ளன.

அந்த வகையில், 3ஆவதாக வந்த சின்னத்தம்பி படமும் ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தில் சிறு வயது பிரபுவாக பி வாசுவின் மகன் சக்தி நடித்திருந்தார்.

மூன்று சகோதரர்களுக்கு தங்கையாக குஷ்பு வளர்கிறார். ஆனால், தனது சகோதரர்களின் விருப்பத்திற்கு மாறாக தன விருப்பத்திற்குரிய ஒருவனை திருமணம் செய்து கொள்வாள் என்று ஜோதிடர் கணித்துக் கூறுகிறார்.

இதை தடுப்பதற்காகவே குஷ்புவை வீட்டுக்காவலில் வைத்து வளர்க்கப்படுகிறார். அவருக்கு பாதுகாப்பாக பிரபு வருகிறார்.

அவர் மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்கிறார். பிரபு ஒரு வெகுளி. அவருக்கு திருமணம் என்றால் என்ன என்றே தெரியாது.

அப்படியிருக்கும் போது அவர் கட்டிய தாலியை பிரபுவை கொன்றுவிட முடிவு செய்கிறார்கள் பிரதர்ஸ்கள்.

அதற்காக பிரபுவின் அம்மாவை சித்ரவதை செய்து அவமானப்படுத்துகிறார்கள். அவர்களை அடித்து உதைக்க, பிறகு ஊரைவிட்டு செல்ல முடிவு செய்கிறார் பிரபு.

இறுதியில், அண்ணன்கள் பிரபுவின் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டு, பிரபுவை, குஷ்புவிடம் சேர்த்து வைக்கிறார்கள். இதுவே கதை.

இந்தப் படத்தில் பிரபு பாட்டுப்பாடும் ஒரு நடிகராகவே வலம் வந்திருப்பார். அவரது பாட்டில் மயங்கி குஷ்பு அவரை காதலிப்பார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் 29 வருடங்களை கடந்துள்ளது. இதன் காரணமாக, 29YrsOfChinnaThambi என்ற ஹேஷ்டேக் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் மட்டுமல்ல இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிக்கும்படியாகவே அமைந்துள்ளது.

அதோடு காலத்தால் அழியாத பாடல்களாகவும் இருக்கிறது. 365 நாட்களுக்கும் மேலாக இந்தப் படம் திரையரங்குகள் வெற்றிகண்டுள்ளது.

இது பிரபுவின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய படம். தமிழகத்தில் மட்டும் ரூ.9 கோடி வரையில் வசூல் கொடுத்த படமாக சின்னத்தம்பி திகழ்கிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஅந்தகாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
Next articleCup முக்கியம் பிகிலு: விஜய்யை கிண்டலடித்த ப்ரியா பவானி சங்கர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here