Priya Bhavani Shankar, பிரியா பவானி சங்கர் காதல் வதந்தி குறித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் தன்னைப் பற்றி வந்த காதல் கிசுகிசு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
தன்னைப் பற்றி வரும் காதல் கிசுகிசுவிற்கு நடிகை பிரியா பவானி சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் சரி, வளர்ந்துவிட்ட நடிகையாக இருந்தாலும் சரி அவர்களைப் பற்றி கிசுகிசு வந்து கொண்டேதான் இருக்கிறது.
காதல், திருமணம், குழந்தை, விவாகரத்து என்று அந்த நடிகையின் அப்போதைய டிரெண்டை பொறுத்து கிசுகிசு வந்து கொண்டே இருக்கிறது.
இளம் நடிகை என்றால், அவர் யாரையோ காதலிக்கிறார், இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றெல்லாம் வதந்தி வரும்.
Priya Bhavani Shankar Love
அந்த வரிசையில், தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் குறித்து புதிய வதந்தி பரவி வருவகிறது. ஆம், மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
இப்படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் மாஃபியா படம் வெளியானது.
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், பிரியா பவானி சங்கரும், எஸ்.ஜே.சூர்யாவும் காதலித்து வருவதாக தகவல் பரவியது.
மான்ஸ்டர் படப்பிடிப்பின் போது இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டதாகவும், அது தற்போது பொம்மை படப்பிடிப்பில் காதலாக மாறியதாகவும் தகவல் வந்த வண்ணம் இருக்கிறது.
பொம்மை படப்பிடிப்பின் போது எஸ்.ஜே.சூர்யா தனது காதலை தெரிவித்ததாகவும், அதற்கு பிரியா பவானி சங்கர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பிரியா பவானி சங்கர் விளக்கம்
இதற்கு மறுப்பு தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) தனது தோழி என்று குறிப்பிட்டார். இதுவரை இந்த காதல் கிசுகிசு குறித்து பதிலளிக்காமல் இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.
என்னையும், எஸ்.சூர்யாவையும் பற்றிய காதல் வதந்திக்கு நான் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உண்மையில் எங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை.
பொதுவாகவே ஒருவரைப் பற்றி கிசுகிசு வந்துவிட்டால் அவரது நண்பர்கள் தான் கேலியும், கிண்டலும் செய்வார்கள்.
அப்படி என்னைப் பற்றி வந்த கிசுகிசுவைப் பார்த்து எனது நண்பர்கள்தான் கிண்டல் செய்வார்கள். அதற்காகதான் நான் பயப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாஃபியா படத்தைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் நடிப்பில், குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, வான், இந்தியன் 2 ஆகிய தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.