Home சினிமா கோலிவுட் Cup முக்கியம் பிகிலு: விஜய்யை கிண்டலடித்த ப்ரியா பவானி சங்கர்!

Cup முக்கியம் பிகிலு: விஜய்யை கிண்டலடித்த ப்ரியா பவானி சங்கர்!

0
409
Priya Bhavani Shankar Bigil Cup

Priya Bhavani Shankar; Cup முக்கியம் பிகிலு: விஜய்யை கிண்டலடித்த ப்ரியா பவானி சங்கர்! லாக்டவுன் நேரத்தில் வீட்டில் சும்மா இருக்கும் ப்ரியா பவானி சங்கர் டிவியில் கால்பந்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்.

Cup முக்கியம் பிகிலு என்று விஜய்யை நக்கல் செய்யும் விதமாக ப்ரியா பவானி சங்கர் பேசியுள்ள வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படம் உலகம் முழவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலும் குவித்து சர்ச்சையில் சிக்கியது. இதன் காரணமாக பிகில் படத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக, விஜய், ஏஜிஎஸ் நிறுவன, பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடம் மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.

அன்புச்செழியன் வீட்டில் மட்டும் ரூ.300 கோடி மதிப்பிலான பணம், ஆவணங்கள் என்று கைப்பற்றப்பட்டது. ஆனால், விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

பிகில் படத்தில், ராயப்பன் விஜய் பேசும் வசனம் Cup முக்கியம் பிகிலு. இது டயலாக் தான் படம் முழுவதும் பயணிக்கும். இறுதியிலும் வரும். இந்த டயலாக்கை பயன்படுத்தி நடிகை ப்ரியா பவானி சங்கர் வீட்டில் வீடியோ கேமில் கால்பந்து விளையாடியுள்ளார்.

அப்போது, அவருக்கு இடையூறாக அவரது அம்மா வரும் போது கூட தொந்தரவு செய்யாத அம்மா என்று கூறிவிட்டு மும்முரமாக விளையாடிக் கொண்டிருப்பார்.

இறுதியில் ஒரு கோல் அடித்ததும், Cup முக்கியம் பிகிலு என்று கூறி சிரிப்பார். தற்போது இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here