Home சினிமா கோலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறிய பிரியா வாரியர்: இதோ வெளியான காரணம்!

இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறிய பிரியா வாரியர்: இதோ வெளியான காரணம்!

287
0
Priya Varrier

Priya Varrier Instagram; இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய பிரியா வாரியர்: இதோ வெளியான காரணம்! மலையாள நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து திடீரென்று வெளியேறியதற்கு என்ன காரணம் என்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது.

பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறியதற்கு என்ன காரணம் என்ற தகவல் வந்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இந்தப் படத்தில், இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடல் மற்றும் முன்னாளே போனாளே என்ற பாடல் ஆகியவற்றின் மூலம் கண் அடித்து ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமானார்.

அதில் முக்கியமானது இந்த மாணிக்க மலராய பூவி என்ற பாடல் தான் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

குறுகிய நாட்களிலேயே அவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. 72 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்கின்றனர்.

இந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளும் வரத் தொடங்கியது. இந்த நிலையில், பிரியா வாரியர் திடீரென்று இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து விலகியுள்ளார்.

ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்காக காரணம் தெரியாமல் இருந்த நிலையில், தற்போது பிரியா வாரியர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா வாரியர் பற்றி சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்தனர். கேலியும் செய்ததோடு, மோசமான வார்த்தைகளால் திட்டவும் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleபிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜூனியர் என்டிஆர் பர்த்டே டுடே!
Next articleகாளி பீடம் : காரைக்கால் அம்மையார்க்கு வழிகாட்டிய ஆலங்காட்டு பத்ர காளி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here