Home சினிமா கோலிவுட் ஆசை ஓயுமா? அழிவு கேட்குமா? கொக்கி குமாரு இஸ் பேக்: புதுப்பேட்டை 2 மோஷன் போஸ்டர்!

ஆசை ஓயுமா? அழிவு கேட்குமா? கொக்கி குமாரு இஸ் பேக்: புதுப்பேட்டை 2 மோஷன் போஸ்டர்!

543
0
Pudhupettai 2 Motion Poster

Pudhupettai 2 Motion Poster; ஆசை ஓயுமா? அழிவு கேட்குமா? கொக்கி குமாரு இஸ் பேக்: புதுப்பேட்டை 2 மோஷன் போஸ்டர்! தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதுப்பேட்டை 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் புதுப்பேட்டை.

பொதுவாக செல்வராகவன் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாது. அதேவேளை காலம் காலமாகப் பேசப்படும் படமாக அமையும்.

புதுப்பேட்டை படமும் அப்படித்தான் செல்வராகவன் மதிப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் உயர்த்திய படம்.

இப்படத்தில் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

புதுப்பேட்டையில் சாதாரண ஒரு வாலிபராக தனது வாழ்க்கையை தொடங்கிய கொக்கி குமார் அதன் பிறகு கேங்ஸ்டராக மாறுவது தான் இப்படம்.

இந்தப் படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரையும் தனுஷ் திருமணம் செய்து கொள்வார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகமும் உருவாகும் செல்வராகவன் அறிவித்தார். தனுஷ் – செல்வராகவன் இணையும் 5 ஆவது படம் புதுப்பேட்டை 2.

இதற்கு முன்னதாக இந்த கூட்டணியில், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை 2 படத்திற்கு சியன் ரோல்டன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை 2 படத்தின் மூலம் கொக்கிகுமாராக தனுஷ் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார்.

இந்த நிலையில், புதுப்பேட்டை 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

போஸ்டரில், ஆசை ஓயுமா? அழிவு கேட்குமா? என்ற டயலாக் வருகிறது. நடுவில், தனுஷிற்காகவே நாற்காலி ஒன்று காத்துக்கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தப் போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை ஏ2 ஸ்டூடியோ சேனலின் 2 வருட கொண்டாட்டத்தின் பயனாக புதுப்பேட்டை 2 பேன்மேடு போஸ்டரை  வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் மீண்டும் சினேகா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது தனுஷ் Dhanush நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் மற்றும் D43 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here