Thalapathy Vijay; எம்ஜிஆர் – ஐ தொடர்ந்து புரட்சி தலைவரான விஜய்! புரட்சி தலைவர் விஜய் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் திடீரென்று டிரெண்டாகி வருகிறது.
டுவிட்டரில் திடீரென்று புரட்சிதலைவர்விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் தளபதி விஜய்யும் ஒருவர். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். விஜய்க்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி வருவதற்கு அவரது ரசிகர்கள் தோளுக்கு தோளாக இருக்கிறார்கள்.
உதாரணமாக மாஸ்டர் படத்தின் நெய்வேலி படப்பிடிப்பின் போது விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து விஜய்யை பார்ப்பதற்கு படப்பிடிப்பு தளத்திற்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படையெடுத்து வந்தனர்.
அவர்களை கையெடுத்து கும்பிட்டு விஜய், செல்ஃபியும் எடுத்துக் கொண்டார். தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டுவிட்டரில் திடீரென்று புரட்சிதலைவர் விஜய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.
இதற்கு முன்னதாக எம்ஜிஆர்-ஐத் தான் புரட்சி தலைவர் என்றும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்றும் அழைப்பது வழக்கம்.
அப்படியிருக்கும் போது இன்று திடீரென்று புரட்சிதலைவர் என்று விஜய்யின் பெயரை வைத்து டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.