Home சினிமா கோலிவுட் ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கும் கபாலி நடிகை!

ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கும் கபாலி நடிகை!

254
0
Radhika Apte Restaurant

Radhika Apte Restaurant; ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கும் கபாலி நடிகை! கபாலி படத்தில் நடித்த நடிகை ராதிகா ஆப்தே ரெஸ்டாரண்ட் தொடங்குவது பற்றி தீவிரமாக யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா ஆப்தே ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கிறார். ஆனால், எப்போது என்று தெரிவிக்கவில்லை.

பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இவரை சர்ச்சை நடிகை என்றும் அழைப்பது உண்டு. காரணம், நிர்வாணமாக நடித்து அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆல் இன் ஆள் அழகுராஜா, வெற்றி செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் அவருக்கு மனைவியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்த நிலையில், தற்போது லாக்டவுனில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ராதிகா ஆப்தே தொடர்ந்து ரசிகர்களுடன் உரையாடுவது, அன்றாடம் எடுக்கப்படும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போது வீட்டிலேயே இருந்து கொண்டு கதை எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறும்படம் ஒன்றை இயக்கவும் செய்துள்ளார். அந்த குறும்படத்தில் ஷஹானா கோஸ்வாமி மற்றும் குல்ஷான் தேவையா ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு The Wedding Guest, The Ashram, Liberté: A Call to Spy ஆகிய 3 வெளிநாட்டு படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அந்தாதூன் என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதோடு, வணிக ரீதியாகவும் நல்ல வசூல் குவித்தது.

தனக்கு நடிப்பு பிடிக்கும் என்று ராதிகா ஆப்தே ஒப்புக்கொண்டாலும், நடிப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளை அவர் விரும்புவதில்லையாம். தொழில் மாற்றம் என்பது யாருக்கும் மோசமானதாக இருக்காது.

அதனால் தான் ரெஸ்டாரண்ட் தொடங்குவது பற்றி யோசித்து வருகிறேன். ரெஸ்டாரண்ட் தொடங்க வேண்டும் என்று ஆசையும், விருப்பமும் இருக்கிறது.

விரைவில், ரெஸ்டாரண்ட் தொடங்க இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here