Home சினிமா கோலிவுட் நடன கலைஞர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் போட முடிவு: ராகவா லாரன்ஸ்!

நடன கலைஞர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் போட முடிவு: ராகவா லாரன்ஸ்!

372
0
Raghava Lawrence

Raghava Lawrence; நடன கலைஞர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50 லட்சம் போட முடிவு: ராகவா லாரன்ஸ்! நடன கலைஞர்களின் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்த ராகவா லாரன்ஸ் அதை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த முடிவு செய்துள்ளார்.

நடன கலைஞர்களின் வங்கிகணக்கில் நேரடியாக ரூ.50 லட்சம் செலுத்துவதற்கு ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து, சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்தனர். ராகவா லாரன்ஸும் தனது பங்கிற்கு ரூ.4 கோடி வரை கொரோனா நிவாரண உதவியாக அளித்தார்.

இந்த நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கூறுகையில், கொரோனா நிவாரண நிதியாக நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளேன். அதில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ.5,550 வீதம் வழங்கப்படுகிறது.

ஆனால், நிறைய கலைஞர்கள் வெளியூர்களில் இருப்பதாகவும், நேரில் வந்து நிவாரண உதவியை பெற இயலாது என்றும் தகவல் அனுப்பினர். இது குறித்து நடன இயக்குநர் தினேஷிடம் பேசினேன்.

இதையடுத்து, அனைத்து உறுப்பினர்களின் வங்கிக்கணக்கிலும் இந்த தொகை போடப்படும். எனவே யாரும் பணத்தை வாங்குவதற்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleதிறக்கப்பட்டது தற்காலிக காய்கறி மார்க்கெட்
Next articleமுன்னாள் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி – திடீர் நெஞ்சுவலி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here