Home சினிமா கோலிவுட் அண்ணாத்தாவே முடியல அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?

அண்ணாத்தாவே முடியல அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?

0
298
Thalaivar170

Thalaivar170; அண்ணாத்தாவே முடியல அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர்169 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

கமல் ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிப்பு வந்தது.

தற்போது தலைவர்170 (Thalaivar170) படம் குறித்து தகவல் வெளியாகி வருகிறது. அதில், ரஜினியின் தலைவர்170 படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினியின் தீவிர ரசிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். ரஜினியும், ராகவா லாரன்ஸ் இருவருமே ராகவேந்திரா சுவாமியின் தீவிர பக்தர்கள்.

ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் கதை கூறியதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்துப் போனதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், தலைவர்170 படத்திலும் அவர் நடிப்பார். அதுவும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் என்று கூறப்படுகிறது.

லக்‌ஷ்மி பாம் என்ற படத்தை இயக்கி வரும் ராகவா லாரன்ஸ் அடுத்து தலைவர்170 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here