Home சினிமா கோலிவுட் சொர்க்கம் என்பது நமக்கு பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை துடைக்கும் ரைசா வைரல் வீடியோ!

சொர்க்கம் என்பது நமக்கு பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை துடைக்கும் ரைசா வைரல் வீடியோ!

300
0
Raiza Viral Video

Raiza House Cleaning Video; சொர்க்கம் என்பது நமக்கு பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை துடைக்கும் ரைசா வைரல் வீடியோ! கமல் ஹாசனின் சொர்க்கம் என்பது நமக்கு என்ற பாட்டை கேட்டுக்கொண்டு ரைசா வில்சன் வீட்டை துடைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

இவர், தனது பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. காதலை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் திருமணத்திற்கு முன்னதான காதல் காம உணர்வை மையப்படுத்தியது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், வீட்டிலேயே இருக்கும் ரைசா வில்சன் தனது அன்றாட பணிகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தனக்குத்தானே முடிவெட்டி அழகு பார்த்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது கமல் ஹாசனின் சொர்க்கம் என்பது நமக்கு என்ற பாட்டை கேட்டுக் கொண்டே வீட்டை மாஃப் போட்டு சுத்தம் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானாலும், நெட்டிசன்கள் இதெல்லாம் கொஞ்சம், ஓவர் தான் என்று கிண்டலடித்து வருகின்றனர். இதைவிட பிரபலங்களின் பெரிய பெரிய வீடியோவை எல்லாம் நாங்கள் பார்த்துவிட்டோம் என்று நக்கலாக கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here