வேலைக்காரப் பெண்ணா பதறிய லதா ரஜினிகாந்த்!
பணக்காரர்களாக இருப்பதில் கூட பிரச்சனை இல்லை. ஆனால் பிரபலங்களாக இருந்தால், இங்கு இடுக்குகளில் இருந்துகூட பிரச்சனை என்கிற பூதம் கிளம்பிவிடும்.
சமீபத்தில் ரஜினிகாந்த் குடும்பத்துடன் 2.0 படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
அந்தப் புகைப்படத்தில் ரஜினி, மனைவி மற்றும் பேரக்குழந்தைகள் அமர்ந்து இருந்தனர். பின்னால், வேலைக்காரப்பெண் நின்றுகொண்டு இருந்தார் .
பிறகு என்ன வேண்டும். நெட்டிசன்கள், பலி ஆடு தானாக வந்து சிக்கிவிட்டது என பொறிந்து தள்ளினர்.
ரைட் இது முடிந்த பழைய கதை. சமீபத்தில் பேட்ட படத்தைப் பார்க்க லதா ரஜினிகாந்த் கிளம்பியுள்ளார்.
வேலைக்காரப் பெண்ணும் நானும் வருகிறேன் எனக் கிளம்பியுள்ளார். உடனே பதறிப்போன லதா, அய்யோ நீ வரவேணாம் எனக் கூறியுள்ளார்.
உனக்கு தனியா வேணுனா டிக்கெட் எடுத்து தரேன் போய் பார்த்துட்டு வா எனக் கூறியுள்ளார்.
நீ பாட்டுக்கு வந்து, திரும்ப யாராவது போட்டோ எடுத்துட்டா பஞ்சாயத்து ஆயிடும் என லதா ரஜினிகாந்த் மறுத்துள்ளார்.