ரஜினி-பெரியார் சர்ச்சை: ரஜினி பெரியார் பற்றி பேசியதற்கு திகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேவேளை திரைப் பிரபலங்கள் பலர் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஜினி-பெரியார் சர்ச்சை
பெரியார் பற்றி பேசுபவர்கள் இன்று தமிழகத்தில் விமர்சனத்துக்கு உள்ளாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.
தற்பொழுது ரஜினிகாந்த் பெரியார் பற்றி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
அரசியல் தலைவர்கள் ஒருபுறம் அந்த கருத்திற்கு ஆதரவும் மறுபுறம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேக்க வேண்டும் எனவும் வற்புறுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் பதில்
இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ” நான் உண்மையைத்தான் சொன்னேன். மன்னிப்பு கேட்க முடியாது” என திட்டவட்டமாக கூறினார்.
இதனால் அவரின் வீட்டின் முன்பும், பல பொது இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போலீசில் புகார்கள், கோர்ட்டில் வழக்குகள் என ரஜினிகாந்த் மீது பல வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
நடிகை குஷ்பூ ஆதரவு
நடிகை குஷ்பூ, ரஜினிகாந்த் பேசியதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் அடுத்தப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் என்பது கூடுதல் செய்தி.
இயக்குனர் பேரரசு ஆதரவு
நடிகரும் இயக்குனருமான பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, “பெரியார் பற்றி பேசியதற்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டுமானால், இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவாக பேசி விமர்சித்த அனைவரும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரோபோ ஷங்கர் ஆதரவு
விஜய் டிவி புகழ், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், ரஜினிகாந்துக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
“தலைவர் எப்பொழுதும் உண்மையையே பேசிவிடுகிறார். உண்மையைச் சொன்னால் ஏன் சில பேருக்கு எரியுது என்று தெரியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார்.