Thalaiva On Discovery டிஸ்கவரி சேனலில் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பியர் கிரில்ஸ்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
இவரைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். Into The Wild with Bear Grylls என்ற புதிய நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் ரஜினி கலந்து கொண்ட எபிசோடு வரும் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பு அண்மையில், டிஸ்கவரி சேனலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது.
இந்த நிலையில், தற்போது #ThalaivaOnDiscovery என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. நேற்றிரவு டிஸ்கவரி சேனலின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது.
டிஸ்கவரி சேனல் சேலஞ்ச் Discovery Channel’s challenge
அதில், நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம். சேலஞ்சை எடுத்துக் கொண்டு பார்ட்டியில் இணைந்திடுங்கள்.
Thalaiva On Discovery
மேலும், http://discoverychannel.co.in/thalaivaondiscovery என்ற லிங்கில் உள்ள பாடலை பதிவிறக்கம் செய்து உங்களது டான்ஸ் சேலஞ்சை #ThalaivaOnDiscovery தலைவா ஆன் டிஸ்கவரி என்ற ஹேஷ்டேக்குடன் பகிருங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் கொடுத்த பியர் கிரில்ஸ், இந்தியா மீது தனது அன்பை வெளிப்படுத்தியதோடு, என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்த போது அதில் ஏராளமான டான்ஸ் சேலஞ்ச் செய்யப்பட்டிருந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தது. பாடலும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் ரஜினிகாந்த், பியர் கிரில்ஸ் உடன் இணைந்து Into The Wild with Bear Grylls என்ற புதிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தொலைக்காட்சி அறிமுகம் Rajinikanth Television Debut
சமீபத்தில், இந்நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானது குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
பல பிரபலங்களின் உயிர் வாழும் திறன்களை பியர் கிரில்ஸ் சோதித்துள்ளார். இந்தியாவின் வனப்பகுதியில் இந்த சவாலை நானும் எதிர்நோக்குகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
Into The Wild with Bear Grylls
இதையடுத்து, ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து பியர் கிரில்ஸ் கூறியிருப்பதாவது: ரஜினியின் டெலிவிஷன் அறிமுகத்திற்காக Into The Wild with Bear Grylls என்ற நிகழ்ச்சி தயாராகி வருகிறது.
உலகம் முழுவதும் பல நட்சத்திரங்கள் உடன் நான் நடித்துள்ளேன். ஆனால், ரஜினியுடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு சிறப்பான தருணம்.
ரஜினிகாந்த் எப்போதும் நடைபயணத்தை விரும்பும் ஒரு நட்சத்திரமாக இருக்கிறார். ஆனால், காடுகளில் அது எல்லாம் சற்று வித்தியாசமானது.
ரஜினியுடன் இணைந்து நடித்தது ரொம்பவும் சந்தோஷமான தருணமாகவும் கேளிக்கை நிறைந்ததாகவும் இருந்தது.
அவரை முற்றிலும் புதிய பாதையில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.