Padayappa; சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த படையப்பா படம் வெளியாகி 21 ஆண்டுகளை கடந்துவிட்டது.
படையப்பா Padayappa படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிவிட்டதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
90 ஆம் ஆண்டுகளில் கோடான கோடி இயக்குநர்களில் இவரைப் போன்று ஒரு இயக்குநர் யாருமில்லை என்றால் அவர்தான் கே எஸ் ரவிக்குமார் K S Ravikumar.
தன்னுடைய படங்களில் இறுதியிலோ அல்லது படத்தில் நடுவிலோ வந்து செல்லக்கூடிய ஒரு கதாபாத்திரம் யார் என்றால் அது கே எஸ் ரவிக்குமார்.
குடும்பக் கதையை மையப்படுத்தி படம் எடுப்பதில் இவரை மிஞ்ச வேறு ஆள் இல்லை. அந்தளவிற்கு படமும், காட்சியும் இருக்கும்.
உதாரணத்திற்கு, படையப்பா Padayappa, ஊர் மரியாதை, நாட்டாமை, முத்து, சேரன் பாண்டியன், பெரிய குடும்பம், பிஸ்தா, சமுத்திரம் என்று படங்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன், லட்சுமி, அப்பாஸ், செந்தில் என்று நட்சத்திரங்கள் ஏராளமானோர் நடித்திருந்த படம் படையப்பா.
ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தை கொடுத்த படம். வயசானாலும் அழகும், ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல என்ற டயலாக்கிற்கு பொருத்தமான பேர் ரஜினிகாந்த்.
குடும்ப கதையை மையப்படுத்தி படையப்பா கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வந்தது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை.
உலகம் முழுவதும் வெளியான படையப்பா 440 மில்லியன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்தது. 100 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றிக் கொடி நாட்டியது.
ரய்மா கிருஷ்ணனுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, தமிழ்நாடு மாநில விருது பெற்றுக் கொடுத்தது.
7 லட்சம் ஆடியோ கேசட்டுகள் உடன் உலகளவில் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையை படையப்பா பெற்றுள்ளது.
இந்த நிலையில், படையப்பா படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் கடந்துள்ளது. இதையே ரஜினிகாந்த் பாம்பு புத்துக்குள்ள கையவிட்டு 21 வருடம் ஆச்சு என்று கூட கூறலாம். இதன் காரணமாக படத்தில் ஒரு காட்சிகளை பதிவிட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.