#27YearsOfUzhaippali: 27 ஆண்டுகளை கடந்த ரஜினியின் உழைப்பாளி! ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி திரைப்படம் வெளியாகி 27 ஆண்டுகளை கடந்துள்ளது.
ரஜினிகாந்த், ரோஜா ஆகியோரது நடிப்பில் வந்த உழைப்பாளி படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இயக்குநர் பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ரோஜா, கவுண்டமனி ஆகியோரது நடிப்பில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஹூன் 26 ஆம் தேதி திரைக்கு வந்த படம் உழைப்பாளி.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உழைப்பாளியாக நடித்திருந்தார். முதலில் ஹீரோயினாக நடிகை கஸ்தூரி நடிக்க வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், பின்னர் ரோஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
வெறும் 58 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தமாமா விஜயா தயாரிப்பு நிறுவனம் நன்றாகவே விளம்பரம் செய்தது. அப்படி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாவும் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆன நிலையில், ஹலோவில் #27YearsOfUzhaippali என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.