Rakul Preet Singh; டாக்டர்களைப் போன்று கவசங்களை அணிந்து கொண்ட பறந்த நடிகை! நடிகை ரகுல் ப்ரீத் சிங் மருத்துவர்களைப் போன்று பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பறந்து சென்றுள்ளார்.
டாக்டர்களைப் போன்று சுயபாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் விமானத்தில் பறந்து சென்றுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாடு முழவதும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக என்ன செய்வது என்று அனைவருமே கதி கலங்கி நிற்கிறார்கள்.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பராமரித்தல், கை சுத்தம் பராமரித்தல் என்று சுத்தம் சுகாதாரத்தோடு வாழ்வதற்கு அனைவருமே பழகி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மட்டும் ஒருபடி மேலேயே போய்விட்டார். ஆம், கொரோனா வைரஸ் தொற்றுதலை தவிர்ப்பதற்காகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று பணியாற்றவும் கற்றுக்கொண்டுள்ள மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் அணிந்து கொள்ளும் பிபிஇ எனப்படும் சுய பாதுகாப்பு கவசங்களை (முக கவசம், கையுறைகள், ஷூ கவர்) அணிந்து கொண்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் விமானத்தில் சிட்டாக பறந்து சென்றுள்ளார்.
அதோடும் மிஷன் டெல்லி என்று ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஹாய் தோழர்களே நாம் இப்படியெல்லாம் பயணிக்க வேண்டியிருக்கும் என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொரு வீடியோவில், முக கவசம் அணிந்து கொண்டு நான் விண்வெளிக்கு செல்வதைப் போன்று உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்தை ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது: ஜான் ஆபிரகாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து நான் நடித்து வரும் அட்டாக் படத்திற்காக அனைவரும் பணியாற்றி வருகிறோம். உண்மையில், நாங்கள் அனைவருமே தனிமனித இடைவெளியை கடைபிடித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.