Home சினிமா கோலிவுட் லவ் புரோபோஸை ஏற்றுக்கொண்ட காதலி: சந்தோஷத்தில் பாகுபலி வில்லன் ராணா டகுபதி!

லவ் புரோபோஸை ஏற்றுக்கொண்ட காதலி: சந்தோஷத்தில் பாகுபலி வில்லன் ராணா டகுபதி!

534
0
Rana Daggubati and Miheeka Bajaj

Rana Daggubati; லவ் புரோபோஸை ஏற்றுக்கொண்ட காதலி: சந்தோஷத்தில் பாகுபலி வில்லன் ராணா டகுபதி! தனது காதல் புரோபோஷலை காதலி ஏற்றுக்கொண்டு ஓகே சொல்லிவிட்டதாக பாகுபலி பட வில்லன் நடிகர் ராணா டகுபதி சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளார்.

ஒருவழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று ராணா டகுபதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்த லீடர் படத்தின் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. இவர், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன்.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார். இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட்டது.

இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார். அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதற்கு தற்போது ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக பகிர்ந்துள்ளார். இவர்களது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் கொரோனாவை விட வேகமாக வைரலாகி வருகிறது.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது காதலியை அறிமுகம் செய்து வைத்த ராணாவிற்கு, ஸ்ருதி ஹாசன், தமன்னா, அனில் கபூர் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleநிஜத்தில் ஹீரோ: பஸ் வசதி செய்து கொடுத்த வில்லன் நடிகர்!
Next articleஅண்ணாத்த எப்போ வருவார்? அதிரடி அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here