Rashmika Mandanna; திருமண நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பர்த்டே டுடே! கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா இன்று தனது 24ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் விராஜ்பேட்டில் பிறந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா, சைக்காலஜி, பத்திரிக்கை, ஆங்கில இலக்கியம் என்று பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.
படித்துக் கொண்டிருந்த போதே மாடலிங்கில் இருந்த ஆர்வத்தால், ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மாடலிங்கா தனது பணியைத் தொடங்கினார். கிளீன் அண்ட் கிளியர் விளம்பர நிகழ்ச்சியில் நடித்த ராஷ்மிகா மந்தனா, கிளீன் அண்ட் கிளியர் விளம்பரத்தின் புதுமுகத்திற்கான டைட்டில் வென்றார்.
அதே ஆண்டில் கிளீன் அண்ட் கிளியரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வந்த கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில், கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஹிரோவாக நடித்தார்.
இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு, ரூ.50 கோடி வரையில் வசூல் பெற்றது.
ரக்ஷித் ஷெட்டி நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.
கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அன்பாக பழகியதைத் தொடர்ந்து, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகா மந்தனாவிற்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
ஆனால், ஒரு வருடம் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தினர்.
கிரிக் பார்ட்டி படத்தைத் தொடர்ந்து அஞ்சனி புத்ரா, சாமக், சலோ, கீதா கோவிந்தம், தேவதாஸ், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கீதா கோவிந்தம் படத்தில் இவரது நடிப்பு பலரிடம் பாராட்டு பெற்றதோடு, சிறந்த நடிகைக்கான கிரிட்டிக்ஸ் பிலிம்பேர் விருதும் கிடைத்தது.
அதே போன்று டியர் காம்ரேட் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தமிழில் சுல்தான் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்துள்ளார்.
இந்தப் படத்தில் கார்த்தி, நெப்போலியன், ரோபோ சங்கர், ரவி மரியா, ரவி கலே ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பாக்யராஜ் கண்னன் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா இன்று தனது 24 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் நியூஸ் வெப்சைட் சார்பாக நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம்.
ஹேப்பி பர்த்டே ராஷ்மிகா மந்தனா மேடம்…