Home சினிமா கோலிவுட் ஈகோ மோதலில் ராஷ்மிகா – சாய் பல்லவி! SaiPallaviVsRashmika ஹேஷ்டேக் டிரெண்டிங்!

ஈகோ மோதலில் ராஷ்மிகா – சாய் பல்லவி! SaiPallaviVsRashmika ஹேஷ்டேக் டிரெண்டிங்!

329
0
Rashmika Mandanna

Rashmika Mandanna; ஈகோ மோதலில் ராஷ்மிகா – சாய் பல்லவி! ஈகோ மோதல் காரணமாக நடிகை ராஷ்மிகா மந்தனா இரண்டாம் நிலை நடிகையாக இருப்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளார்.

சாய் பல்லவி முன்னணி நடிகையாக இருப்பதால், பட வாய்ப்புகள் அவரையே தேடி செல்வதாக கூறப்படுகிறது.

திரைத்துறையில், மிகவும் பிரபலமான பரபரப்பான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு ராஷ்மிகா, பீஷ்மா, சுல்தான் மற்றும் புஷ்பா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தனது க்யூட்டான எக்ஸ்பிரசன் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்ல, கோலிவுட்டிலும் ராஷ்மிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். மற்ற நடிகைகளைப் போன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், நானி நடிப்பில் உருவாகி வரும் ஷியாம் சிங்கா ராய் என்ற படத்தில் நடிப்பதற்கு ராஷ்மிகாவை அணுகியுள்ளனர். ஆனால், இந்த வாய்ப்பை அவர் நிராகரித்துள்ளாராம்.

காரணம், இரண்டு பெண் கதாபாத்திரங்களை இந்தப் படம் கொண்டுள்ளதாம். மேலும், முதல் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறாராம். ஆகையால், தான் இரண்டாம் நிலை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளாராம்.

அதாவது 2ம் நிலை ஹீரோயினாக நடிப்பதற்கு ராஷ்மிகா மறுப்பு தெரிவித்துள்ளாராம். இதற்கு மற்றொரு காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது பெரும்பாலான படங்களில் சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்படுவதால், ராஷ்மிகா மந்தனா இந்த முடிவு எடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதன் விளைவாக, ராஷ்மிகா மந்தனா மற்றும் சாய் பல்லவி இருவரும் ஈகோ மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதையடுத்து, ஹலோவில் SaiPallaviVsRashmika என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here