Home சினிமா கோலிவுட் கையில எது கிடச்சாலும் அடிச்சு துவைக்கும் பாக்‌ஷிங் வீராங்கனை ரித்திகா சிங்!

கையில எது கிடச்சாலும் அடிச்சு துவைக்கும் பாக்‌ஷிங் வீராங்கனை ரித்திகா சிங்!

345
0
Ritika Singh

Ritika Singh Lockdown Video; கையில எது கிடச்சாலும் அடிச்சு துவைக்கும் பாக்‌ஷிங் வீராங்கனை ரித்திகா சிங்! லாக்டவுனில் வீட்டில் இருக்கும் பாக்‌ஷிங் வீராங்கனை ரித்திகா சிங், துணி துவைக்கும் வீடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

துணியை துவைக்கும் ரித்திகா சிங்கின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில், சென்னையில் தான் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பரவி வரும் கொரோனா காரணமாக மேலும், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கின்றனர். அவர்கள், தங்களது அன்றாட வேலைகளான சமையல், வீட்டு வேலை, தோட்ட வேலை, யோகா, உடற்பயிற்சி, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பலவற்றையும் வீடியோ, புகைப்படங்களாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிக் பாக்‌ஷர், பாக்‌ஷிங் வீராங்கனையான ரித்திகா சிங், வீட்டில் துணி துவைக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இதற்கு முன்னதாக எத்தனையோ பேர் இது போன்று துணி துவைக்கும் வீடியோ வெளியிட்டிருந்தாலும், தற்போது ரித்திகா சிங் வெளியிட்டதற்கு ஈடு இணை இல்லை.

ஆம், அந்த வீடியோவில், ஒரு டவலுக்கு சோப் போட்டு கையில் ஒரு கட்டையை வைத்து அடிக்கிறார். அப்போதுதான் அழுக்கு போகும் போல…அதான் அந்த அடி அடிக்கிறார்.

இதன் மூலம் தான் ஒரு பாக்‌ஷிங் வீராங்கனை என்பதை மீண்டும் மீண்டும் ரசிகர்களுக்கு நினைவுபடுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டு வேலைகளை செய்யச் சொன்ன தனது அம்மா தன்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாள், அதற்கு தான் என்ன செய்துகொடுக்கிறேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleவிஜய் எப்படி இந்தளவிற்கு உயர்ந்தார்? என்பதை புரிந்து கொண்டேன்: சாந்தனு!
Next articleதமிழ்நாடு பள்ளி கல்விதுறை 12 பேர் கொண்ட நிபுனர்குழுவை அமைத்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here