Home சினிமா கோலிவுட் வாத்தி கம்மிங் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்!

வாத்தி கம்மிங் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்!

1201
0

Vaathi Coming Song; வாத்தி கம்மிங் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர்! மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு ரோபோ சங்கர் தனது மகளுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

வாத்தி கம்மிங் பாடலுக்கு ரோபோ சங்கர் தனது மகளுடன் இணைந்து டான்ஸ் ஆடியுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தல், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மாஸ்டர் 2020 ஆம் ஆண்டின் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படமாக கருதப்படுகிறது.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவேண்டிய படம் கொரோனா வைரஸால் தள்ளிப்போயுள்ளது. ஆம், மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு சினிமா பிரபலங்கல் பலரும் டான்ஸ் ஆடிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு வந்தனர். அவர்களில் தற்போது ரோபோ சங்கரும் இணைந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண நடுத்தர மக்கள் வரை அனைவருமே வீட்டிற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோபோ சங்கர் தனது மகள் இந்திரஜா உடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleகால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் ஹினா கான்!
Next articleகால்மேல் கால் போட்டு கெத்தா போஸ் கொடுத்த விஜய் சேதுபதி: உப்பெனா அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here