Home சினிமா கோலிவுட் கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் ஹினா கான்!

கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் ஹினா கான்!

0
398
Hina Khan Wash Doormat

கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் ஹினா கான்! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ஹினா கான் கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் நிலை வந்துவிட்டது.

கால் மிதிக்கு அழுதுகிட்டே சோப் போடும் நிலை வந்துவிட்டது என்று நடிகை ஹினா கான் புலம்புகிறார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் மட்டும் 35 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், எப்போதுமே பிஸியாக இருந்த சினிமா பிரபலங்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கிச்சன் பக்கமே சென்றிருக்கமாட்டார்கள். வீட்டில் எந்த வேலையும் செய்திருக்கவும் மாட்டார்கள்.

ஆம், அதற்காக வேலையாட்கள் வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் இருந்த பிரபலங்களின் நிலைமை தற்போது தலைகீழாகவே மாறிவிட்டது.

வீடு பெருக்குவது, துணி துவைப்பது, கால் மிதி துவைப்பது, சமையல் செய்வது என்று அவர்களின் நிலை இப்படியெல்லாம் மாறும் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்கள்.

அவர்களில் பாலிவுட் நடிகை ஹினா கானுக்கு என்ன விதிவிலக்கா? இல்லவே இல்லை. அவருக்கும் இதே நிலை தான். ஸ்மார்ட்போன் என்ற குறும்படத்தின் மூலம் நடிகையான ஹினா கான், ஹேக்டு படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாகவே நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும், வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

எப்போதும் சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஹினா கானுக்கு 21 நாட்கள் ரொம்பவே கடினமான நாளாகவே அமைந்துவிட்டது.

ஆம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நடிகை ஹினா கானை அவரது அம்மா வீட்டு வேலைகளை குறிப்பாக கால் மிதிக்கு சோப் போடுமாறு கட்டளையிட்டுள்ளார்.

அம்மாவின் கட்டளை என்பதால் செய்ய மனமின்றி அழுதுகொண்டே கால் மிதிக்கு சோப் போட்டு அலசியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கால் மிதிக்கு சோப் போடுவது மட்டுமல்லாமல், வீட்டை சுத்தம் செய்வது, இந்தியாவின் தற்போதைய நிலையை சித்தரிக்கும் ஓவியம், உடற்பயிற்சி என்று பிஸியாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here