Home சினிமா கோலிவுட் ரஜினியைப் போன்று அரசியலுக்கு வரும் ரோபோ சங்கர்: அப்படியே சொல்லு!

ரஜினியைப் போன்று அரசியலுக்கு வரும் ரோபோ சங்கர்: அப்படியே சொல்லு!

351
0
Robo Shankar Movie Poster

Rajinikanth Politics Speech; அரசியல் அறிவிப்பு குறித்து ரஜினிகாந்த் பேசி வரும் வசனத்தை ரோபோ சங்கர் தனது படத்திற்கும் பயன்படுத்திய போஸ்டர் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் குறித்து வெளியிட்டார் (Rajini Political Entry).

அதன் பிறகு கட்சி பெயரையும் அறிவிக்கவில்லை. தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து வந்தார்.

அவர் எப்போதுதான் அரசியலுக்கு வருவார் (Rajinikanth Politics) என்று பலரும் அதை வைத்தே அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றும், அது போலவே நடந்துவிட்டது. ஆம், சென்னை லீலா பேலஸில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் (Rajini Press Meet).

அப்போது, தான் முதல்வர் வேட்பாளர் இல்லை. தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. கட்சிக்கு மட்டுமே தலைவராக இருக்க விரும்புகிறேன்.

இனிமே, ரசிகர்கள் யாரும் வருங்கால முதல்வர் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ரஜினி பேசியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள், விமர்சனங்கள் வந்தன.

இந்த நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும் (Robo Shankar) ரஜினிகாந்த் பாணியில் அரசியலுக்கு வருவதாக தனது போஸ்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

அந்தப் போஸ்டரில், “வருவது உறுதி, வந்துட்டே இருக்கேன், வந்துட்டேன் ஆனா நான் இல்லை” என்று ரஜினிகாந்த் இதுவரைய பேசிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது.

ஆம், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் ரோபோ சங்கர் நடிக்கும் புதிய படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா (Arasiyalla Idhellam Sadharnamappa).

இது கவுண்டமனி பேசிய டயலாக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ரோபோ சங்கர் உடன் இணைந்து வீரா, மாளவிகா நாயர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ரஜினிகாந்தை நேரடியாக விமர்சிக்கும் வகையில், இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதற்கு இதுவரை ரஜினி ரசிகர்கள் எந்த விமர்சனமும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் வந்த கோமாளி படத்தின் டீசரில் ரஜினியின் அரசியல் அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது.

இது சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த டீசரில் இருந்து ரஜினி இடம்பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleசர்கார் கிளைமேக்ஸ் vs ரஜினியின் அரசியல் முடிவு ஒரு பார்வை!
Next articleமாப்பிள்ளை அவருதான்…. டிரெஸ் என்னோடது: ரஜினியின் பேச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here