Home சினிமா கோலிவுட் சர்கார் கிளைமேக்ஸ் vs ரஜினியின் அரசியல் முடிவு ஒரு பார்வை!

சர்கார் கிளைமேக்ஸ் vs ரஜினியின் அரசியல் முடிவு ஒரு பார்வை!

406
0
Rajinikanth Press Meet at Leela Palace

Rajinikanth Press Meet; அரசியல் அறிவிப்பு குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் தான் கட்சிக்கும் மட்டுமே தலைவர் முதல்வராக வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வந்த சூப்பர்ஹிட் படம் சர்கார் (Sarkar). முழுக்க முழுக்க அரசியல் கருத்துக்களையும், வாக்குரிமையையும் மையப்படுத்தி இப்படம் வெளியாகியிருந்தது.

தனது வாக்கை மட்டுமே செலுத்துவதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் சுந்தர் ராமசாயின் வாக்கு கள்ள ஓட்டாக போடப்படுகிறது.

இதை எதிர்த்து, நீதிமன்றம் வரை சென்று தனது வாக்கை திரும்பப் பெறுகிறார்.

ஒரு கட்டத்தில் தனது வேலையையும் தூக்கி எறிந்து தேர்தலில் போட்டியிடுகிறார். 234 தொகுதியிலும் நின்று வெற்றியும் பெருகிறார்.

தனக்கு பிடித்த ஒருவரை முன்னாள் மாவட்ட கலெக்டர் சற்குணம் என்பவரை முதல்வர் வேட்பாளாரக முன்மொழிகிறார் (Sarkar CM Candidate).

தான் எதிர்க்கட்சியில் நின்று கேள்வி கேட்க வேண்டும் என்பதை விரும்புகிறார். இதுதான் சர்கார் கிளைமேக்ஸ் (Sarkar Climax Scene).

இதே பாணியில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்த் (Rajinikanth) பேசியுள்ளார்.

தமிழகத்தில் பணபலம், அரசியல் பலத்துக்கு எதிராக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலு வருவதாகவும், ஆனால், தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் கூறியுள்ளார்.

இனிமேல், ரசிகர்கள் யாரும் வருங்கால முதல்வர் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு, தனது 3 முக்கியமான திட்டங்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் போது கிட்டத்தட்ட 50,000 பதவிகள் இருக்கும். ஆனால், தேர்தல் முடிந்த பிறகும் கூட, அந்த பதவிகளில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் தாங்கள் ஆளும் கட்சி என்பதை சுட்டிக்காட்டி நிறைய ஊழல் செய்வார்கள்.

Rajinikanth 3 Plan in Politics:

திட்டம் 1: தேவையான அளவில் மட்டுமே கட்சி நிர்வாகிகளை வைத்துக் கொள்ள வேண்டும்.

திட்டம் 2: இளைஞர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வங்கப்பட வேண்டும். 60 முதல் 65 சதவிகிதம் வரை இளைஞர்களுக்கும், 30 – 35 சதவிகிதம் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதி ஆகியோருக்கு வழங்கப்படும்.

திட்டம் 3: கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர். தான் கட்சி தலைவராகவே இருக்க விரும்புவதாகவும், முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

ஆக மொத்தத்தில் சர்கார் கிளைமேக்ஸ் காட்சியும், ரஜினி பேசிய வசனமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இன்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. எப்போதுதான் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என்று இலவுகாத்தகிளி போல ரஜினி ரசிகர்கள் இன்னமும் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleயார் அந்த கமலி? எங்கிருந்து வருகிறார்? டுவிட்டரில் டிரெண்டிங்!
Next articleரஜினியைப் போன்று அரசியலுக்கு வரும் ரோபோ சங்கர்: அப்படியே சொல்லு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here