Home சினிமா கோலிவுட் சமந்தாவுக்கு கொரோனாவா? ரசிகர்கள் அதிர்ச்சி!

சமந்தாவுக்கு கொரோனாவா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
246
Samantha Corona Virus

Samantha; சமந்தாவுக்கு கொரோனாவா? ரசிகர்கள் அதிர்ச்சி! சமந்தா முத்தம் கொடுத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமந்தா முத்தம் கொடுத்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த 2019 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியானது. தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சினிமா திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், நடிகை சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யா, நாய்குட்டி, குடும்பம் என்று பொழுதை கழித்து வருகிறார். மேலும், தனது புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் மூலமாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆம், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது தோழியும், பேஷன் டிசைனருமான ஷில்பா ரெட்டியின் கன்னத்தில் சமந்தா முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஷில்பா ரெட்டி கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

இதனால், சமந்தாவுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ? என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால், இது குறித்து சமந்தா எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here