Home சினிமா கோலிவுட் சமந்தா பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்!

சமந்தா பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்!

0
366
Samantha Birthday Today

Samantha Akkineni; சமந்தா ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்குகள்! சமந்தா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், டுவிட்டரில், #HappyBirthdaySamantha, #SamanthaAkkineni, #HBDsamantha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

சமந்தா இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சிம்பு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு அதர்வா முரளி நடிப்பில் வந்த பானா காத்தாடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து, விஜய், சூர்யா, ஜீவா ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய் உடன் இணைந்து கத்தி, தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள சமந்தா திருமணத்திற்குப் பிறகும் நடித்து வருகிறார்.

தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்னும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

இந்த நிலையில், இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை சமந்தா கொண்டாடுகிறார். இதன் காரணமாக, டுவிட்டரில், #HappyBirthdaySamantha, #SamanthaAkkineni, #HBDsamantha ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here