Home சினிமா கோலிவுட் வாழ்க்கையில் ஏமாற்றங்களையே சந்தித்த சமுத்திரக்கனி பர்த்டே டுடே!

வாழ்க்கையில் ஏமாற்றங்களையே சந்தித்த சமுத்திரக்கனி பர்த்டே டுடே!

0
279
samuthirakani

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நடிகர் சமுத்திரக்கனி இன்று தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

ராஜபாளையம் அருகிலுள்ள செய்தூர் என்ற பகுதியில் பிறந்தவர் நடிகர் சமுரக்கனி. கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பிறந்தவர்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுகள் உடன் வந்த சமுத்திரக்கனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், ஒரு நடிகனாக வருவதற்குரிய தகுதி இல்லை என்று கூறி மக்கள் இவரை உதாசினம் செய்துள்ளனர்.

அப்போதுதான் பாண்டிராஜன் நடிப்பில் வந்த படிக்கிற வயசுல படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆம், படிக்கிற வயசுல படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் விஜயன் என்பவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சமுத்திரக்கனி, 100 ஆவது படமான, கே பாலசந்தரின் பார்த்தாலே பரவசம்  படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இந்தப் படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். ஆனால், அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தொடர்ந்து நெறஞ்ச மனசு, பொய், பருத்துவீரன் ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சசிகுமார் இயக்கத்தில் வந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

சாட்டை படம் நல்ல ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. இதே போன்று வேலையில்லா பட்டதாரி படமும் அப்படிதான் அமைந்தது. தொடர்ந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஏராளமான படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணி பாடகர் என்று பல திறமைகளைக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here