Sandy Dance Video; வெறும் லுங்கியோடு லண்டனில் டான்ஸ்: போலீசை கண்டு மிரண்ட சாண்டி! லண்டன் சென்றிருந்த சாண்டி அங்கு நடு ரோட்டில் வெறும் லுங்கி மற்றும் பனியனோடு டான்ஸ் ஆடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
லண்டனில் நடு ரோட்டில் டான்ஸ் ஆடிய சாண்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகர்கள், நடிகைகள் வீட்டில் இருந்துகொண்டு சமையல், உடற்பயிற்சி, வீட்டு வேலை பார்ப்பது, டான்ஸ் ஆடுவது, டிக் டாக் செய்வது என்று பிஸியாக இருக்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு நாளும் தங்களுக்கு பிடித்தவற்றை செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சாண்டி லண்டனில் இருந்து கொண்டு லுங்கியில் நடு ரோட்டில் டான்ஸ் ஆடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். போலீசை கண்டதும் மிரண்டு அப்படியே மெதுவாக அங்கிருந்து நடப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஆனால், சாண்டி எப்போது லண்டன் சென்றார்? இதுநாள் வரை சென்னையில் இருந்துகொண்டு மனைவியுடன் டான்ஸ் ஆடுவது போன்று வீடியோவை வெளியிட்டு வந்தார். மேலும் லாக்டவுன் நேரத்தில் யாருமே வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது.
அப்படியிருக்கும் போது சாண்டி எப்படி லண்டன் சென்றார் என்ற கேள்வி எழுகிறது.