Sayyeshaa Pregnant; சாயிஷா கர்ப்பமா? அப்பா – அம்மாவான ஆர்யா சாயிஷா ஜோடி? நடிகை சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக கோலிவுட்டில் புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது.
நடிகை சாயிஷா கர்ப்பமாக இருப்பதாகவும், ஆர்யா அப்பாவானதாகவும் தகவல் பரவி வருகிறது.
நான் கடவுள், ராஜா ராணி, ஆரம்பம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகர் ஆர்யா.
இவர், வனமகன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயிஷா சைகலை கஜினிகாந்த் படத்தின் வாயிலாக காதலித்து வந்துள்ளார்.
Arya Sayyeshaa Wedding
ஆர்யா – சாயிஷா காதலுக்கு இரு வீட்டாரும் ஓகே சொல்ல, கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 9, 10 ஆம் தேதிகளில் ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் (Arya Sayyeshaa Wedding) சிறப்பாக நடந்தது.
ஆர்யா – சாயிஷா திருமண நிகழ்ச்சியில், விஷால், சூர்யா, கார்த்தி ராணா டகுபதி, அல்லு அர்ஜூன், சஞ்சய் தத், ஆதித்யா பஞ்ஜோலி, குஷி கபூர் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Arya Sayyeshaa Wedding Reception
இதையடுத்து, சென்னையில் மார்ச் 14 ஆம் தேதி ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு (Arya Sayyeshaa Wedding Reception) நிகழ்ச்சி நடந்தது. இதில், கோலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கடந்த மார்ச் மாதம் ஆர்யா – சாயிஷா தம்பதியினர் தங்களது முதலாவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சாயிஷா கர்ப்பமாக இருப்பதாகவும், ஆர்யா தந்தையானதாகவும் கோலிவுட் வட்டாரத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாயிஷா தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், ஒரு டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளா.
அதில், அவர் குண்டாக தெரிவது போன்றும், மிகவும் மெதுவாக டான்ஸ் ஆடுவது போன்றும் வீடியோ இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த பலரும் சாயிஷா கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவலை பரப்பிவிட்டுள்ளனர்.
இது குறித்து சாயிஷாவின் அம்மா கூறுகையில், இது முற்றிலும் வதந்தி தான். யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.