Home சினிமா கோலிவுட் டுவிட்டரில் செம்பருத்தி நடிகை ஷபானாவின் பெயரில் போலி கணக்கு!

டுவிட்டரில் செம்பருத்தி நடிகை ஷபானாவின் பெயரில் போலி கணக்கு!

338
0
Shabana Fake Twitter Account

Sembaruthi Shabana Fake Id; டுவிட்டரில் செம்பருத்தி நடிகை ஷபானாவின் பெயரில் போலி கணக்கு! டுவிட்டரில் தனது பெயரில் போலி கணக்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செம்பருத்தி நடிகை ஷபானா ரசிகர்களை உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷபானா ரசிகர்களிடம் அது தனது டுவிட்டர் பக்கம் இல்லை என்று எச்சரித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நாடகத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஷபானா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவரோ, தளபதி விஜய்யின் தீவிர ரசிகை.

மேடை நிகழ்ச்சிகளில் தளபதி விஜய்யின் மாஸான டயலாக்கான உசுப்பேத்துறவங்க கிட்ட உம்முனும் கடுப்பேத்துறவங்க கிட்ட கம்முனும் இருக்க வேண்டும் என்று பேசி கை தட்டல்களை வாங்கியதோடு மேடையை தெறிக்க விட்டுள்ளார்.

தமிழ்நாட்டுல பேமஸ் ஜீ தமிழ், ஜீ தமிழில் பேமஸ் செம்பருத்தி, செம்பருத்திம்கு பேமஸ் ஷபானா என்று கூறும் அளவிற்கு பிரபலமாகியுள்ளார்.

இவர், மலையாளத்தில் விஜயதசமி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, தமிழில், செம்பருத்து என்ற தொடரின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

செம்பருத்தி தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஷபானா டிக் டாக் செய்து நிறைய வீடியோக்களை வெளியிட்டுள்ளார். மேலும், எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஷபானா தனது புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், டுவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை வைத்து தனது பெயரில் நிறைய போலி கணக்குகள் வருவதாக கூறி ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

பொதுவாக சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சி தொடரிலோ பிரபலமாகிவிட்டாலே அவர்களது பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு விடும். அதனாலேயே நிறைய பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து வெளியேறிவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here