Shruti Haasan: ஸ்ருதி ஹாசன். தான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டது உண்மையே அதைப்பற்றி வெளியில் சொல்ல நான் வெட்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணிப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வந்த 7-ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Shruti Haasan Love
அதன் பிறகு 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர, ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.
இவர், லண்டனைச் சேர்ந்த நடிகரும், பாப் பாடகருமான மைக்கேல் கோர்சலே என்பவரை காதலித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவியது.
இதை ஸ்ருதி ஹாசனும் தெளிவாக உறுதி செய்தார். இதையடுத்து, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமாக விமர்சனங்களை முன் வைத்தனர்.
சோறு துண்ணலையா? நன்றாக சாப்பிட்டு உங்களது உடல் எடையை கூட்டுங்கள். ஏன் இப்படி மெலுந்து இருக்கிறீர்கள் என்றெல்லாம் விமர்சித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஸ்ருதி ஹாசன் கூறியிருப்பதாவது, ‘என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன கருத்துக்கள் பதிவிடுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
மற்றவர்கள் எப்படி என்று தீர்மானிக்க இங்கு யாரும் புகழ்பெற்றவர்கள் அல்ல. யாரும், யாரையும் இவர் அப்படி, அவர் இப்படி என்று ஒரு போதும் தீர்மானிக்க இயலாது.
இது என்னோட வாழ்க்கை. எனது முகம். ஆமாம், நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
இதை சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. என்னை இன்னும் அதிகமாக நேசிக்க நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
ஏனென்றால், எனது வாழ்க்கையில் அழகான காதல் கதை என்னிடமே உள்ளது. உங்களுக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.