Shruti Haasan; எனக்கு சிகரெட் வாசனை பிடிக்கும்: ஸ்ருதி ஹாசன் பெருமிதம்! தனக்கு சிகரெட் வாசனை பிடிக்கும் என்று ரசிகர்களுடன் உரையாடிய போது நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் தனக்கு சிகரெட் வாசனை பிடிக்கும் என்று ரசிகர்களுடன் உரையாடிய போது தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஸ்ருதி ஹாசன். 7 ஆம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது லாபம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திகொண்டுள்ளார்.
தனியாக வசித்து வரும் ஸ்ருதி ஹாசன் அவ்வப்போது வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தனக்கு மிகவும் பிடித்த வாசனைகள் குறித்து சமீபத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள், புதிய தோள் பொருட்கள், சிகரெட் வாசனை – புகைக்க அல்ல, சாதரணமாகவே அந்த புகையிலை வாசனை பிடிக்கும், குழந்தை பருவத்தில் அழிக்க பயன்படுத்திய ரப்பர் மற்றும் வெண்ணிலா ஆகிய வாசனைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஸ்ருதி ஹாசன் தெரிவித்துளளார் என்பது குறிப்பிடத்தக்கது.